ஒழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒழி1ஒழி2ஒழி3

ஒழி1

வினைச்சொல்ஒழிய, ஒழிந்து, ஒழிக்க, ஒழித்து

 • 1

  (கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவது) இல்லாமல் போதல்.

  ‘மருந்து வைத்ததில் எலிகள் ஒழிந்தன’
  ‘நாட்டில் தீண்டாமை அறவே ஒழிந்துவிட்டது என்று கூற முடியாது’
  ‘எத்தனையோ மூடநம்பிக்கைகள் ஒழிந்தன’

 • 2

  (வெறுப்போடு கூறும்போது) எங்காவது போதல்; தொலைதல்.

  ‘இவர் வீட்டை விட்டு ஒழிந்தால்தான் நிம்மதி’

 • 3

  (செய்துகொண்டிருக்கிற வேலை) முடிவுக்கு வருதல்; (முடிந்த பிறகு) ஓய்வு நேரம் கிடைத்தல்.

  ‘வீட்டு வேலை ஒழிந்தால்தானே வெளியில் எங்காவது போகலாம்’
  ‘இன்றுதான் உன்னைப் பார்க்க வருவதற்கு ஒழிந்தது’

 • 4

  (ஒருவரும் இல்லாமல் ஓர் இடம்) காலியாக இருத்தல்.

  ‘குளிக்கும் அறை ஒழிந்திருக்கிறது, குளித்துவிட்டு வா’

ஒழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒழி1ஒழி2ஒழி3

ஒழி2

துணை வினைஒழிய, ஒழிந்து, ஒழிக்க, ஒழித்து

 • 1

  முதன்மை வினையின் செயல் முடிவுக்கு வருவது (பேசுபவரின் நோக்கில்) பெரும் ஆறுதல் தருவது என்ற பொருளை உணர்த்தும் துணை வினை.

  ‘பீடை விட்டொழிந்தது’
  ‘ஊரையெல்லாம் நடுங்கவைத்த கொள்ளைக்காரன் செத்தொழிந்தானா?’

ஒழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒழி1ஒழி2ஒழி3

ஒழி3

வினைச்சொல்ஒழிய, ஒழிந்து, ஒழிக்க, ஒழித்து

 • 1

  (கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல்செய்தல்; அழித்தல்.

  ‘எலிகளை ஒழிக்க விவசாயிகள் பல புதிய முறைகளைக் கையாளுகிறார்கள்’
  ‘ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துவிடுவோம் என்றுதான் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்’
  ‘அறியாமையை ஒழிக்க ஓர் இயக்கம்’

 • 2

  (ஒருவருக்குத் தொல்லை தந்து அவர் செய்யும் தொழிலை விட்டு) போகும்படி செய்தல்; அகற்றுதல்.

  ‘இவனை இந்த அலுவலகத்திலிருந்தே ஒழித்துவிடுகிறேன்’
  ‘வியாபாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒழிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்’

 • 3

  (தாறுமாறாகக் கிடக்கும் பொருள்களை அகற்றி இடத்தை) காலி செய்தல்.

  ‘சமையல் அறையை ஒழித்துச் சுத்தம் பண்ணிவிட்டுப் படுத்தாள்’
  ‘தேர்வுக்காகப் படிக்கும் மகனுக்கு அறை ஒன்றை ஒழித்துவிட்டிருக்கிறோம்’