தமிழ் ஒழிய யின் அர்த்தம்

ஒழிய

இடைச்சொல்

 • 1

  (கூறப்படுவதிலிருந்து இயல்பான விளைவு இல்லாத நிலை ஏற்படும்போது) ‘தவிர’ என்ற பொருளில் இரண்டு தொடர்களைத் தொடர்புபடுத்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘நான் சாப்பிட்டேனே ஒழியப் பசி அடங்கவில்லை’
  ‘மழை பெய்ததே ஒழிய வெப்பம் குறையவில்லை’
  ‘அவர்மேல் மதிப்பு அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை’
  ‘நான் அவனைப் பார்த்தேனே ஒழியப் பேசவில்லை’

 • 2

  (நிபந்தனை வாக்கியத்தில்) ‘தவிர’, ‘அல்லாமல்’ என்ற பொருளில் நிபந்தனையைக் குறிக்கும் தொடரை அடுத்து வரும் இடைச்சொல்.

  ‘நீ கேட்டால் ஒழிய அவன் தரப்போவதில்லை’
  ‘மீதி உள்ள பாடல்களையும் சேர்த்தால் ஒழிய உன் ஆய்வு முழுமைபெறாது’