ஒழுகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒழுகு1ஒழுகு2

ஒழுகு1

வினைச்சொல்ஒழுக, ஒழுகி

 • 1

  (துவாரம், காயம் முதலியவற்றிலிருந்து நீர், இரத்தம் முதலியவை) வெளியேறி வழிதல்.

  ‘மழை பெய்தால் வீடு ஒழுக ஆரம்பித்துவிடும்’
  ‘அடிபட்டு மூக்கில் இரத்தம் ஒழுகியது’
  ‘வாயில் எச்சில் ஒழுகுகிறது’

ஒழுகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஒழுகு1ஒழுகு2

ஒழுகு2

வினைச்சொல்ஒழுக, ஒழுகி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பின்பற்றி) நடத்தல்; (ஒன்றோடு ஒத்து) வாழ்தல்.

  ‘சமூக விதிகளைப் பின்பற்றி ஒழுகவே விரும்புகிறோம்’
  ‘உலகத்தோடு ஒட்டி ஒழுகினால் பிரச்சினை எதுவும் இல்லை’