தமிழ் ஒழுக்கம் யின் அர்த்தம்

ஒழுக்கம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொது நலன், ஒற்றுமை முதலியவற்றைக் கருத்தில் கொண்டு) தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி; உரிய முறையில் நடந்துகொள்ளுதல்.

  ‘அவனுடைய ஒழுக்கத்தில் குறை எதுவும் சொல்ல முடியாது’
  ‘நிலை தாழ்ந்தபோதும் அவர் ஒழுக்கத்தைக் கைவிடவில்லை’
  ‘ஒழுக்கமான பையன்’

 • 2

  (பெண்களைக் குறிக்கும்போது) கற்பு.

  ‘ஒழுக்கத்தில் சிறந்தவள்’