தமிழ் ஒழுங்கு யின் அர்த்தம்
ஒழுங்கு
பெயர்ச்சொல்
- 1
(ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு ஏற்பட்டிருக்கும்) நியதி அல்லது பொருத்தமான முறை.
‘வேலையை ஒழுங்காகச் செய்!’‘வியாபாரம் ஒழுங்கான முறையில் நடந்துவருகிறது’ - 2
(பொருள், கருத்து முதலியனவற்றில் அமையும்) சீர்.
‘அவளுடைய பற்கள் ஒழுங்காக அமைந்திருக்கின்றன’‘வீட்டில் சாமான்கள் எதுவும் ஒரு ஒழுங்கில் இல்லை’‘கட்டுரையில் கருத்துகள் ஒழுங்காக அமைந்துள்ளன’ - 3
(சமூகத்தில் அமைதிக்கு வேண்டிய) பொறுப்பான நடத்தை.
‘நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும்’ - 4
கட்டுப்பாடான நடத்தை.
‘அவனைக் குறைசொல்கிறாயே, நீ ரொம்ப ஒழுங்கா?’‘மாணவர்களிடையே ஒழுங்கை நிலைநாட்ட ஆசிரியர்கள் முயல வேண்டும்’ - 5
இலங்கைத் தமிழ் வழக்கு ஆயத்தம்; ஏற்பாடு.
‘கல்யாணத்துக்கு ஒழுங்கெல்லாம் செய்துவிட்டாயா?’‘பயணத்திற்கு இன்னும் எந்த ஒழுங்கும் செய்யவில்லை’‘பணத்துக்கு அவன் மூலம் ஒழுங்கு செய்துவிட்டேன்’