தமிழ் ஒழுங்குமுறை யின் அர்த்தம்

ஒழுங்குமுறை

பெயர்ச்சொல்

 • 1

  (விதிகளுக்குப் பணிந்து நடக்கும்) கட்டுப்பாடு.

  ‘நிறுவனங்கள் தங்களுக்கு என்று சில ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளன’
  ‘ஓர் ஒழுங்குமுறை இல்லையா? யார் எது வேண்டுமானாலும் செய்யலாமா?’

 • 2

  முறையாகச் செய்யப்படும் ஏற்பாடு.

  ‘அரசு ஊழியர்களுக்குப் போதிய வீட்டு வசதி செய்து தருவதற்கு இந்தச் சட்டத்தில் ஒழுங்குமுறை செய்யப்பட்டிருக்கிறது’
  ‘பயணச் சீட்டு வாங்கும் இடத்தில் ஒழுங்குமுறை இல்லை’