தமிழ் ஒவ்வு யின் அர்த்தம்

ஒவ்வு

வினைச்சொல்ஒவ்வாத, ஒவ்வாமல் முதலிய எதிர்மறை வடிவங்கள் மட்டும்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒன்று மற்றொன்றுக்கு) பொருந்திவருதல்; ஏற்றுக்கொள்ளும்படி இருத்தல்.

  ‘மரபிற்கு ஒவ்வாதவற்றை ஏற்பதில் அவருக்குத் தயக்கம் உண்டு’
  ‘இது பண்புக்கு ஒவ்வாத செயல்’
  ‘காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள்’
  ‘புதிய மருந்து அவர் உடலுக்கு ஒவ்வாமல் போகவே உடலெங்கும் தடித்துவிட்டது’