தமிழ் ஒவ்வொரு யின் அர்த்தம்

ஒவ்வொரு

பெயரடை

 • 1

  குறிப்பிடப்படுகிற தனித்தனியான.

  ‘ஒவ்வொரு பக்கமாக நூலைப் புரட்டிக்கொண்டே வந்தார்’
  ‘ஒவ்வொரு நாளும் ஒரு புதுச் சேலை உடுத்தி வருகிறாள்’
  ‘ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது’

 • 2

  (ஒரு வாக்கியத்தில் ஒரு முறைக்கு மேல் கூறப்படும்போது கடைசியாக வரும் இடத்தில்) வேறுவேறு.

  ‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமாகத் தீர்வு காண வேண்டியிருக்கிறது’
  ‘ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்’