தமிழ் ஓ யின் அர்த்தம்

இடைச்சொல்

 • 1

  ஒருவர் கூறும் செய்தி தனக்கு முன்பே தெரியும் என்பதைக் குறிப்பதற்கு வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘‘நாளை மாமா ஊரிலிருந்து வருகிறார்’. ‘ஓ! எனக்குத் தெரியுமே’’

 • 2

  ஒரு உடன்பாட்டுப் பதிலைக் கூறும் வாக்கியத்தின் தொடக்கத்தில் இடப்படும் இடைச்சொல்.

  ‘‘நாளை படத்திற்குப் போகலாமா?’ ‘ஓ! போகலாமே’’
  ‘‘அவன் நாளை வருவானா?’ ‘ஓ! வருவானே’’

 • 3

  மகிழ்ச்சி, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘ஓ! எவ்வளவு அற்புதமான இயற்கைக் காட்சி!’
  ‘ஓ! என்ன ஒரு வேகம்!’
  ‘ஓ! நீங்களா? ஊரிலிருந்து எப்போது வந்தீர்கள்?’
  ‘ஓ! உனக்குப் படம் வரையக்கூடத் தெரியுமா?’