தமிழ் ஓகோ யின் அர்த்தம்

ஓகோ

இடைச்சொல்

  • 1

    புதிய செய்தியை ஒருவர் கேட்கும்போது தனக்குத்தானே அதை உறுதி செய்துகொள்ளும் வகையில் வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘ஓகோ! அவன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டானா?’
    ‘ஓகோ! அப்படிச் செய்திருக்கக் கூடாதோ!’
    ‘ஓகோ! இந்த விஷமங்களுக்கெல்லாம் காரணம் இவன்தானா?’