தமிழ் ஓகோவென்று யின் அர்த்தம்

ஓகோவென்று

வினையடை

 • 1

  (பிறர்) மெச்சும்படியாக; விமரிசையாக; கோலாகலமாக.

  ‘ஓகோவென்று இருந்த குடும்பம் இப்போது நொடித்துவிட்டது’
  ‘விழா ஓகோவென்று நடந்தேறியது’

 • 2

  (வியாபாரத்தைக் குறிக்கையில்) மிகவும் வெற்றிகரமாக அல்லது லாபகரமாக.

  ‘அந்தத் திரைப்படம் ஓகோவென்று ஓடியது’
  ‘வியாபாரம் அப்படி ஒன்றும் ஓகோவென்று நடக்கவில்லை’