தமிழ் ஓங்கி யின் அர்த்தம்

ஓங்கி

வினையடை

 • 1

  (கையால் அடித்தல், கருவியால் வெட்டுதல் போன்ற செயல்களோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) பலமாக; விசையோடு.

  ‘முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டார்’
  ‘கோடாலியை மரத்தில் ஓங்கிப் பாய்ச்சினார்’

 • 2

  (குரலைக் குறிப்பிடும்போது) உரக்க.

  ‘இப்படி ஏன் ஓங்கிப் பேசுகிறாய்?’

 • 3

  (உயரத்தைக் குறிப்பிடும்போது) உயரமாக; நெடிதாக.

  ‘மரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது’
  ‘ஓங்கி உயர்ந்த உருவம்’