தமிழ் ஓங்கு யின் அர்த்தம்

ஓங்கு

வினைச்சொல்ஓங்க, ஓங்கி

 • 1

  (அடிக்கவோ வெட்டவோ ஒன்றை) உயர்த்துதல்.

  ‘அந்தச் சிறுவனை அடிக்க அவர் கையை ஓங்கினார்’
  ‘மரத்தை வெட்ட ஓங்கியபோது கோடாலி கையிலிருந்து நழுவியது’

 • 2

  உயர் வழக்கு (தொழில், வாழ்க்கை, செல்வாக்கு முதலியவை) மேல்நிலைக்கு வருதல்; முன்னேறுதல்; சிறத்தல்.

  ‘உள்நாட்டுக் கைத்தொழில்கள் ஓங்க ஏதுவான சூழல் உருவாக வேண்டும்’
  ‘இந்தப் படத்திற்குப் பிறகு புது நடிகரின் புகழ் மேலும் ஓங்கும்’

தமிழ் ஓங்கு யின் அர்த்தம்

ஓங்கு

துணை வினைஓங்க, ஓங்கி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற நிலைகளை உணர்த்தும் முதன்மை வினைகளின் செயல் மேலும் உயர்வான நிலை அடைதல் என்ற பொருள் தரும் ஒரு துணை வினை.

  ‘விவசாயமும் தொழிலும் செழித்தோங்கும் நாடு’
  ‘நீ வாழ்க்கையில் உயர்ந்தோங்க என் வாழ்த்துகள்’