தமிழ் ஓசை யின் அர்த்தம்

ஓசை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று மற்றொன்றின் மீது படும்போது ஏற்படும்) சத்தம்.

  ‘பாத்திரங்கள் நகர்த்தப்படும் ஓசை கேட்டது’
  ‘தோசை வார்க்கும் ஓசை’
  ‘காலடியோசை’

 • 2

  (ஒன்று அல்லது ஒருவர் ஏற்படுத்தும்) ஒலி.

  ‘குழலோசை’
  ‘குயிலோசை’
  ‘அவள் அழும் ஓசை கேட்டதும் திரும்பிப் பார்த்தேன்’

 • 3

  இலக்கணம்
  செய்யுளுக்கு உரிய ஒலியின் அளவு.

  ‘வெண்பாவிற்கு உரிய ஓசை’