தமிழ் ஓசைப்படாமல் யின் அர்த்தம்

ஓசைப்படாமல்

வினையடை

 • 1

  (ஒரு செயலைச் செய்யும்போது) சப்தம் ஏற்படாதவாறு.

  ‘இரவில் நேரம் கழித்து வீடு திரும்பியவன் ஓசைப்படாமல் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான்’
  ‘ஓசைப்படாமல் பையிலிருந்த சில்லறையை எடுத்து மேசையின் மேல் வைத்தான்’

 • 2

  பிறர் அறியாதவாறு.

  ‘ஓசைப்படாமல் கடிதத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டாள்’
  ‘கிராமத்தில் இருந்த வீட்டை ஓசைப்படாமல் விற்றுவிட்டு நகரத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டார்’