தமிழ் ஓட்டம் யின் அர்த்தம்

ஓட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (விரைந்து செல்லுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 ஓடுதல்

   ‘ஏன் இந்த ஓட்டம்? மெதுவாக வந்திருக்கலாமே’

  2. 1.2 ஓட்டப் பந்தயம்

   ‘இருநூறு மீட்டர் ஓட்டத்தில் அவருக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது’

  3. 1.3 (கிரிக்கெட் போன்ற விளையாட்டில் ஆட்டக்காரர் பந்தை அடித்துவிட்டுத் தன் முனைக்கும் எதிர் முனைக்கும் இடையே உள்ள தூரத்தை ஓடிக் கடப்பதன் மூலம் பெறும்) புள்ளி

   ‘இந்திய வீரர் கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்’
   ‘இந்த ஆட்டத்தில் வெற்றிபெற இந்தியா 240 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்’

  4. 1.4 (ஒன்றின்) விரைவு

   ‘பேருந்தின் ஓட்டத்தில் அந்தப் பூங்கா பார்வையில் பட்டு மறைந்தது’

  5. 1.5 (குறிப்பிட்ட பொதுநலனின் நோக்கத்தைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தப் பெரும் எண்ணிக்கையில் நபர்கள்) நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஓடுதல்

   ‘எய்ட்ஸ் நோயைக் குறித்த பள்ளி மாணவர்களின் ஓட்டம் நாளை சென்னையில் நடைபெறும்’
   ‘காச நோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது’

 • 2

  (ஓடுவதாகக் கூறும் முறையில் உள்ள வழக்கு)

  1. 2.1 (இலக்கியப் படைப்பு போன்றவற்றின்) சீரான போக்கு

   ‘கதை ஓட்டம்’
   ‘படத்தின் ஓட்டம்’

  2. 2.2 (ஒரு காரியத்தை முடிக்க) பெரும் பாடுபடுதல்

   ‘குடும்பத்தைக் காப்பாற்ற இந்த வயதிலும் என்ன ஓட்டம் ஓடுகிறார்!’