தமிழ் ஓட்டை யின் அர்த்தம்

ஓட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (நீர், காற்று, ஒளி போன்றவை தடையின்றிச் செல்லக்கூடிய விதத்தில்) ஒரு பரப்பில் இருக்கும் துளை.

  ‘படகில் ஏற்பட்ட ஓட்டையை உடனே அடைத்தார்கள்’
  ‘பாத்திரம் ஓட்டையா? ஒழுகுகிறதே’

 • 2

  (சட்டம், ஒப்பந்தம் முதலியவற்றில்) குறைபாடு.

  ‘ஒப்பந்தத்தில் இவ்வளவு ஓட்டைகள் இருக்கும்போது நீ எப்படிக் கையெழுத்து போட்டாய்?’

 • 3

  நல்ல நிலையில் இல்லாதது; பழுதாகக்கூடியது.

  ‘ஓட்டை வண்டி’
  ‘ஓட்டைப் பேனா’