தமிழ் ஓது யின் அர்த்தம்

ஓது

வினைச்சொல்ஓத, ஓதி

 • 1

  (வேதத்தை அல்லது மந்திரங்களை) முறைப்படி வாய்விட்டுச் சொல்லுதல்; உச்சாடனம் செய்தல்.

  ‘புரோகிதர் மந்திரம் ஓதித் திருமணத்தை நடத்திவைத்தார்’
  ‘சரியாக வேதம் ஓதத் தெரிந்தவர்கள் குறைந்துவிட்டார்கள்’

 • 2

  வட்டார வழக்கு (ஒருவரைப் பற்றி மற்றவரிடம் ரகசியமாக) குறைகூறுதல்.

  ‘அவன் அதிகாரியிடம் என்னைப் பற்றி என்ன ஓதினானோ தெரியவில்லை. அவர் என் மேல் கோபமாக இருக்கிறார்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (மாந்திரீக முறைப்படி தயாரிக்கும் தகட்டுக்கு) பலம் சேர்க்க மந்திரங்களை உச்சரித்தல்.

  ‘தகட்டை ஓதி அறையில் பதி’