தமிழ் ஓம் யின் அர்த்தம்

ஓம்

பெயர்ச்சொல்

 • 1

  இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் மந்திரம்; பிரணவம்.

தமிழ் ஓம் யின் அர்த்தம்

ஓம்

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கேள்விக்கு உடன்பாடாக பதில் அளிக்கும்போது அல்லது ஒருவரோடு உடன்படும்போது பயன்படுத்தும் இடைச்சொல்; ‘ஆம்’; ‘ஆமாம்’.

  ‘நீ சாப்பிட்டுவிட்டாயா? ஓம், சாப்பிட்டுவிட்டேனே’
  ‘ஓம் என்று சொல்லி விட்டு, இப்போது அரசு மறுக்கிறது’
  ‘அவர் உதவி செய்ய ஓம் என்று விட்டார்’