தமிழ் ஓம்படு யின் அர்த்தம்

ஓம்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒத்துக்கொள்ளுதல்; உடன்படுதல்.

  ‘தாய் தகப்பன் அவளின் கல்யாணத்திற்கு ஓம்பட்டுவிட்டார்கள்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரோடு தகராறு செய்யாமல்) ஒத்துப்போதல்.

  ‘அவனோடு பிரச்சினை பண்ணாமல் ஓம்பட்டுவிட்டு வா’
  ‘அவர் எல்லாருடனும் ஓம்பட்டுப் பழகுவார்’
  ‘யார் என்ன சொன்னாலும் ஓம்பட்டு அதைச் செய்வார்’