தமிழ் ஓய் யின் அர்த்தம்

ஓய்

வினைச்சொல்ஓய, ஓய்ந்து

 • 1

  (தன் போக்கிலேயே நிகழ்ந்து தானாகவே) ஒரு முடிவான நிலைக்கு வருதல்; முடிதல்.

  ‘மழை பெய்து ஓய்ந்துவிட்டது’
  ‘ஆப்பிள் விளையும் பருவம் ஓய்ந்துவிட்டது’
  ‘கடிகாரம் மூன்று முறை அடித்து ஓய்ந்தது’
  ‘இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது’

 • 2

  (சந்தடி, ஓசை) அடங்குதல்.

  ‘இரவு எட்டு மணிக்குத்தான் சாலையில் சற்றுச் சந்தடி ஓய்ந்தது’

 • 3

  களைப்படைதல்; தளர்ந்துபோதல்.

  ‘வெயிலில் நடந்து ஓய்ந்துபோய் வீடு வந்துசேர்ந்தேன்’
  ‘அவர் ஏற்கனவே வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தில் ஓய்ந்துபோய் இருக்கிறார்’

 • 4

  (பெரும்பாலும் எதிர்மறை வினையெச்ச வடிவங்கள் மட்டும்) (செயல் முடிந்து) அமைதியடைதல்.

  ‘புத்தகத்தைப் படித்து முடிக்கும்வரை ஓய மாட்டான்’
  ‘வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறான்’