தமிழ் ஓய்வுபெறு யின் அர்த்தம்

ஓய்வுபெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

 • 1

  (நிர்ணயித்த வயதை அடைந்ததும் ஒருவர்) பணியிலிருந்து விலகுதல்.

  ‘முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின் அவர் இன்று பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்’
  ‘ஓய்வுபெற்ற பின் அவர் கிராமத்துக்குப் போய்விட்டார்’

 • 2

  (அரசியல், சினிமா, விளையாட்டு போன்ற துறைகளில்) மேற்கொண்டு பங்குகொள்வதிலிருந்து ஒருவர் நிரந்தரமாக விலகுதல்.

  ‘உடல்நிலை காரணமாக அந்த மூத்த தலைவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்’
  ‘பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்ற சில ஆண்டுகளிலேயே அவர் மரணமடைந்தார்’
  ‘உலகக்கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாக அந்த கிரிக்கெட் வீரர் அறிவித்துள்ளார்’