தமிழ் ஓரக்கண்ணால் யின் அர்த்தம்

ஓரக்கண்ணால்

வினையடை

  • 1

    (நேரடியாகப் பார்க்காமல்) கண்ணின் ஓரத்திற்குக் கருவிழியைக் கொண்டுசென்று; கடைக்கண்ணால்.

    ‘அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை ஓரக்கண்ணால் பார்த்தாள்’
    ‘இயக்குநரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை நான் சொன்னபோது மற்றவர்கள் ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டார்கள்’
    ‘ஓரக்கண்ணால் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தபடி வீட்டினுள் நுழைந்தான்’