தமிழ் ஓரம் யின் அர்த்தம்

ஓரம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஓர் இடத்தின் மையத்திலிருந்து அல்லது ஆள் நடமாடும் இடத்திலிருந்து) ஒதுங்கிய பக்கம்.

  ‘வண்டியைத் தெரு ஓரமாக நிறுத்திவிட்டு வந்தான்’
  ‘வண்டி கோயில் வாசல் ஓரமாக வந்து நின்றது’
  ‘ஜட்கா வண்டிக்காரர் ‘ஓரம் போ, ஓரம் போ’ என்று கூச்சலிட்டார்’

 • 2

  (ஒன்றின்) விளிம்பு; பக்கவாட்டு நுனி.

  ‘புகைப்படத்தின் ஓரம் கிழிந்திருந்தது’
  ‘ஓர் ஓரத்தில் அடிபட்டுப் பழம் நசுங்கியிருந்தது’
  ‘புடவையில் ஓரம் அடித்துக் கொடு’

 • 3

  (ஆறு, கடல் முதலியவற்றின்) கரையை ஒட்டிய பகுதி/(சுவர் முதலியவற்றின்) ஒட்டிய பகுதி.

  ‘வாய்க்கால் ஓரமாக நடந்துகொண்டிருந்தேன்’
  ‘அந்தச் சுவர் ஓரமாகவே நடந்துசென்றேன்’