தமிழ் ஓரம்கட்டு யின் அர்த்தம்

ஓரம்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  (வாகனத்தைப் பாதையின்) ஓரத்துக்குக் கொண்டுபோதல்.

  ‘வண்டியை ஓரம்கட்டிவிட்டு மாட்டைத் தட்டிக்கொடுத்தவாறு கீழே குதித்தான்’

 • 2

  (பெற்ற வெற்றியால்) பிறரின் அல்லது பிறவற்றின் முக்கியத்துவத்தைக் குறையச் செய்தல்.

  ‘வசூலில் இந்தப் படம் மற்றவற்றை ஓரம்கட்டிவிட்டது’

 • 3

  (ஒருவர் பாதையின்) ஓரத்தில் ஒதுங்குதல்.

  ‘சாக்கடைத் தண்ணீரில் கால் படாமல் ஓரம்கட்டி நடந்தேன்’

 • 4

  (வேண்டாம் என்று) ஒதுக்குதல்.

  ‘சில திரைப்பட இயக்குநர்கள் பழைய நடிகைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டுப் புதிய நடிகைகளுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள்’