தமிழ் ஓரளவு யின் அர்த்தம்

ஓரளவு

வினையடை

 • 1

  குறிப்பிட்ட அளவுக்கு.

  ‘அவன் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது’
  ‘இந்த ஊரிலேயே ஓரளவு வசதி படைத்த குடும்பம் இவர்களுடையதுதான்’
  ‘இவருடைய முதல் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஓரளவு வசூலைப் பெற்றுத்தந்தது’
  ‘ஓரளவுதான் நான் பொறுமையாக இருப்பேன்’