தமிழ் ஓலை யின் அர்த்தம்

ஓலை

பெயர்ச்சொல்

 • 1

  பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றின் இலை.

 • 2

  உலர்ந்த பனை இலை.

  ‘ஓலைப் பெட்டியில் கருப்பட்டி’

 • 3

  (பழங்காலத்தில் பனையின் உலர்ந்த மடலில் அல்லது துணியில் எழுதப்பட்ட) ஆவணம்.

  ‘அண்டை நாட்டு அரசர் தூதுவன்மூலம் ஓலை அனுப்பியிருந்தார்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின்) ஜாதகம்.

  ‘பொருத்தம் பார்க்க ஓலையைச் சாத்திரியாரிடம் கொண்டுசென்றோம்’
  ‘ஓலை பொருந்தினால் இந்தச் சம்பந்தத்தை முடித்துவிடலாம்’