தமிழ் ஓவென்று யின் அர்த்தம்

ஓவென்று

வினையடை

 • 1

  வலி, துக்கம் ஆகியவற்றின் தீவிரத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்பு.

  ‘பெருவிரலில் மிதிபட்ட அவன் ஓவென்று கத்திவிட்டான்’
  ‘அந்தத் துயரச் செய்தியைக் கேட்டதும் அவன் ஓவென்று அழுதுவிட்டான்’

தமிழ் ஓவென்று யின் அர்த்தம்

ஓவென்று

வினையடை

 • 1

  (முகத்தைக் குறிப்பிடும்போது) களையிழந்து; பொலிவிழந்து/(தெரு போன்றவற்றைக் குறிப்பிடும்போது) வெறிச்சோடி.

  ‘ஏன் இப்படி உன் முகம் ஓவென்று இருக்கிறது, உடம்பு சரியில்லையா?’
  ‘ஆட்கள் யாரும் இல்லாமல் தெருவே ஓவென்றிருந்தது’
  ‘பார்வையாளர்கள் மிகவும் குறைவாக வந்திருந்ததால் அரங்கம் ஓவென்று காணப்பட்டது’