தமிழ் கச யின் அர்த்தம்

கச

வினைச்சொல்கசக்க, கசந்து

 • 1

  பாகற்காயில் இருப்பது போன்ற சுவையைக் கொண்டிருத்தல்.

  ‘இது என்ன வெள்ளரிக்காய், இப்படிக் கசக்கிறது?’
  ‘வாய் கசக்கிறது, சாப்பிடப் பிடிக்கவில்லை’

 • 2

  வெறுத்தல்; பிடிக்காமல் போதல்.

  ‘இருபது வயதுக்குள் வாழ்க்கை கசந்துவிட்டதா?’
  ‘கூட நூறு ரூபாய் கிடைத்தால் கசக்கவா போகிறது?’