தமிழ் கசக்கிப்பிழி யின் அர்த்தம்

கசக்கிப்பிழி

வினைச்சொல்-பிழிய, -பிழிந்து

  • 1

    (ஒருவரை) கடுமையாக வருத்துதல்.

    ‘அவரிடமா வேலை செய்கிறாய், கசக்கிப்பிழிந்துவிடுவாரே!’
    ‘பெண்வீட்டாரைக் கசக்கிப்பிழிந்து வரதட்சணை வாங்குவதா?’
    ‘அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று மாணவர்களைக் கசக்கிப்பிழியக் கூடாது’