தமிழ் கச்சிதம் யின் அர்த்தம்

கச்சிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (சற்று அதிகம் அல்லது குறைவு என்று இல்லாமல் மிகவும்) சரியான அளவு; ஒன்றுக்கென்றே அமைந்தது போன்ற பொருத்தம்.

  ‘உன்னுடைய அலங்காரம் கன கச்சிதம்!’
  ‘உடை உனக்குக் கச்சிதமாக இருக்கிறது’
  ‘சிறிய குடும்பத்துக்குக் கச்சிதமான வீடு இதுவே’

 • 2

  (ஒரு செயலைச் செய்வதில்) நேர்த்தி.

  ‘கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிப்பான்’
  ‘பந்தை அவன் கச்சிதமாகப் பிடித்தான்’
  ‘கச்சிதமான அணுகுமுறை’