தமிழ் கஞ்சி யின் அர்த்தம்

கஞ்சி

பெயர்ச்சொல்

 • 1

  சோறு வெந்த பிறகு வடித்து எடுத்த, குழகுழப்புத் தன்மை உடைய நீர்.

 • 2

  (அரிசி, கோதுமை முதலியவை போட்டுக் காய்ச்சித் தயாரிக்கப்படும்) திரவ உணவு.

  ‘மருத்துவர் கோதுமைக் கஞ்சி மட்டுமே குடிக்கச் சொல்லியிருக்கிறார்’
  ‘வயலில் வேலை செய்பவர்களுக்குக் கஞ்சி கொண்டுபோக வேண்டும்’

 • 3

  (பருத்தித் துணிகள் மொடமொடப்பாக இருக்க அவற்றைத் தோய்க்கும்போது போடுவதற்கான) பசைத் தன்மையுடைய கரைசல்.

  ‘கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை’