தமிழ் கட யின் அர்த்தம்

கட

வினைச்சொல்கடக்க, கடந்து

 • 1

  (ஒரு பரப்பின்) ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்/(இடத்தை, பொருளை, நபரை) தாண்டிச் செல்லுதல்.

  ‘பெரிய நகரங்களில் சாலையைக் கடப்பது எளிதல்ல’
  ‘கேரளத்தில் பல இடங்களில் ஆற்றைக் கடக்கத் தோணிகள் உண்டு’
  ‘பேருந்து தன்னைக் கடந்து மறையும்வரை காத்திருந்தான்’
  உரு வழக்கு ‘வாழ்க்கையில் பல பிரச்சினைகளைக் கடந்துவர வேண்டியதாக உள்ளது’

 • 2

  (புகழ், முக்கியத்துவம் போன்றவை குறிப்பிட்ட காலத்தை) தாண்டி நிலைத்தல்.

  ‘நல்ல இலக்கியங்கள் காலத்தைக் கடந்து நிற்பவை’

 • 3

  (காலம்) கழிதல்.

  ‘விண்ணப்பம் அனுப்பிப் பல மாதங்கள் கடந்துவிட்டன’
  ‘காலம் கடந்து இதைச் செய்திருக்கிறாய்’