தமிழ் கட்டம் யின் அர்த்தம்

கட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  நான்கு பக்கமும் கோடுகளால் அமையும் வடிவம்.

  ‘இந்தக் கட்டத்தின் உள்ளே நீ நில்’
  ‘தாயம் விளையாடவா இந்தக் கட்டம்?’
  ‘கட்டம் போட்ட சட்டை’

 • 2

  (படிப்படியான திட்டத்தில் அல்லது வளர்ச்சியில் ஒரு) நிலை.

  ‘குடிநீர்ப் பற்றாக்குறையை நீக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்’
  ‘அந்தத் தலைவரின் முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிகிறது’

 • 3

  (ஒன்று நிகழும் காலத்தில்) ஒரு சந்தர்ப்பம்; தருணம்.

  ‘மனம் வெறுத்துப்போயிருந்த கட்டத்தில் அவரை நான் சந்தித்தேன்’
  ‘வாழ்க்கையில் பல நெருக்கடியான காலகட்டங்களைக் கடந்து வந்தவர் அவர்’

 • 4

  (சினிமா, நாடகம் போன்றவற்றில்) குறிப்பிடப்படும் ஒரு சூழல்; இடம்.

  ‘இந்தக் கட்டத்தில்தான் கதாநாயகன் வில்லனிடமிருந்து கதாநாயகியைக் காப்பாற்றுகிறான்’
  ‘காதலன் காதலியைச் சந்திக்கும் கட்டங்களிலெல்லாம் வீணை இசை பின்னணியாக ஒலிக்கிறது’