தமிழ் கட்டளை யின் அர்த்தம்

கட்டளை

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டம், விதிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அல்லது ஒருவருக்கு மற்றொருவரின் மேலுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்) ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.

  ‘‘நிவாரண வேலையைத் துரிதப்படுத்துக’ என்று மேலிடத்திலிருந்து கட்டளை வந்துள்ளது’
  ‘தேர்வு முடியும்வரை சினிமாவுக்குப் போகக் கூடாது என்பது அப்பாவின் கட்டளை’

 • 2

  (இறைவனின்) ஆணை.

  ‘ஆண்டவனின் கட்டளை இப்படி இருக்கிறது’

 • 3

  (ஒருவர் தன் பெயரில்) கோயிலில் ஒரு விசேஷ தினத்தன்று பூஜை, அபிஷேகம், உற்சவம் போன்றவை நடக்க நிதி வழங்கிச் செய்யும் ஏற்பாடு.

 • 4

  (குறிப்பிட்ட செயலைக் கணிப்பொறி செய்வதற்கான) இயக்கமுறை.