தமிழ் கட்டாயம் யின் அர்த்தம்

கட்டாயம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு சூழ்நிலையில் ஒன்றைச் செய்வதை) தவிர்க்க முடியாத நிலை; (ஒருவரின்) வற்புறுத்தல்; நிர்ப்பந்தம்.

  ‘உணவுப்பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது இல்லை’
  ‘சில நாடுகளில் கட்டாய ராணுவச் சேவை அமலில் இருக்கிறது’

தமிழ் கட்டாயம் யின் அர்த்தம்

கட்டாயம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கிவைக்கப்படும் செங்கல் தொகுப்பு.

  ‘ஆயிரம்ஆயிரம் கல்லாகக் கட்டாயம் போடு’
  ‘கல்லை இறக்கும்போதே கட்டாயம் போட்டுவிட்டால் எவ்வளவு கல் வாங்கியிருக்கிறோம் என்று எளிதில் தெரியும்’