தமிழ் கட்டி யின் அர்த்தம்

கட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (உடலில் தோன்றி) வலியை உண்டாக்கும் கெட்டியான புடைப்பு.

  ‘கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு முகத்திலும் முதுகிலும் கட்டிகள் தோன்றுவது உண்டு’
  ‘கர்ப்பப்பையில் கட்டி’

 • 2

  (திரவ நிலையில் இருப்பது அல்லது மாவாக இருப்பது) இறுகிக் கெட்டிப்பட்டிருக்கும் நிலை.

  ‘பனிக் கட்டி’
  ‘களிமண் கட்டி’

 • 3

  (தயிரைக் குறிக்கும்போது) சற்றே உறைந்த நிலை.

  ‘கட்டித் தயிர்’

 • 4

  குறிப்பிட்ட வடிவில் வார்த்தெடுக்கப்பட்ட துண்டு.

  ‘தங்கக் கட்டிகள்’
  ‘சோப்புக் கட்டி’