தமிழ் கட்டிக்கா யின் அர்த்தம்

கட்டிக்கா

வினைச்சொல்-காக்க, -காத்து

 • 1

  (ஒரு அமைப்பு) சிதறிப்போகாமல் நிலைப்படுத்துதல்.

  ‘கட்சியின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது மிகவும் கடினமான செயல்’
  ‘தொழிலாளர் இயக்கத்தைக் கட்டிக்காத்த முக்கியத் தலைவர் இவர்’
  ‘தாத்தா இருந்தவரையில் குடும்பத்தைக் கட்டிக்காத்தார்’

 • 2

  பாதுகாத்தல்.

  ‘நாட்டின் இறையாண்மையைக் கட்டிக்காப்பதில் அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கு மிக முக்கியமானது’