தமிழ் கட்டுப்படியாகு யின் அர்த்தம்

கட்டுப்படியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  (பொருளின் விலை விற்பவருக்கு) போதுமானதாக இருத்தல்; கட்டுதல்.

  ‘மாம்பழம் டஜன் நூறு ரூபாய். அதற்கும் குறைத்துக் கொடுத்தால் எனக்குக் கட்டுப்படியாகாது’
  ‘கரும்புக்குக் கட்டுப்படியாகிற விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரினார்கள்’

 • 2

  (தேவை அதிகமாக இருக்கும்போது) (ஒன்றுக்குக் கொடுக்க வேண்டிய தொகை வசதிக்கு உட்பட்டதாக இருப்பதால்) ஈடுகொடுக்க முடிதல்; சமாளிக்க முடிதல்.

  ‘நம் வீட்டுக்கு எண்ணெய் வாங்கிக் கட்டுப்படியாகாது போலிருக்கிறது’
  ‘நீயும் சம்பாதித்தால்தான் இந்த வாடகை நமக்குக் கட்டுப்படியாகும்’