தமிழ் கட்டுப்படு யின் அர்த்தம்

கட்டுப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  அடங்கி நடத்தல்; பணிதல்; கீழ்ப்படிதல்.

  ‘நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நான் அதற்குக் கட்டுப்படுகிறேன்’
  ‘யாருக்கும் கட்டுப்படாமல் அவர் வாழ்ந்துவிட்டார்’

 • 2

  (நோய் முதலியவை) தணிதல்; அடங்குதல்.

  ‘மஞ்சளைச் சுட்டு முகர்ந்து பார், ஜலதோஷம் கட்டுப்படும்’