தமிழ் கட்டுப்படுத்து யின் அர்த்தம்

கட்டுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  ஓர் அளவுக்குள் இருக்குமாறு அல்லது வெளிப்படாதவாறு ஒன்றை நிறுத்துதல்.

  ‘என்னுள் எழுந்த கோபத்தைச் சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டேன்’
  ‘உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுப் பழக்கத்தினால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும்’
  ‘ஒன்றுக்குப் போவதைக்கூடக் கட்டுப்படுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தான்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரை) தன் வசத்தின் அல்லது தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருத்தல்.

  ‘பெற்றோர்கள் குழந்தைகளை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்தக் கூடாது’
  ‘நவீனத் தொழில்நுட்பம் வளரும் நாடுகளுக்குக் கிடைக்காதவாறு பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன’

 • 3

  அளவுக்கு மீறிச் செல்லாமல் ஒன்றைத் தடுத்தல்; தடுத்து ஒழுங்குபடுத்துதல்.

  ‘இந்த இயந்திரத்தில் நீராவியின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விசை உள்ளது’
  ‘காடுகளால் வெள்ளம் கட்டுப்படுத்தப்படுகிறது’

 • 4

  (விதிமுறை, பொறுப்பு முதலியன ஒருவரை) பிணைத்தல்.

  ‘தந்தை வாங்கிய கடன் மகனையும் கட்டுப்படுத்துமா?’
  ‘இந்த விற்பனை வரிச் சட்டம் பெட்டிக்கடைக் காரர்களைக் கட்டுப்படுத்தாது’