தமிழ் கட்டுப்பாடு யின் அர்த்தம்

கட்டுப்பாடு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வரம்பை மீறாத ஒழுங்கு.

  ‘நம் கட்சியில் தொண்டர்கள் கட்டுப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள்’
  ‘கட்டுப்பாடான வாழ்க்கை’

 • 2

  (சுதந்திரமாகச் செயல்பட விடாமல் ஒருவர் மீது செலுத்தும்) ஆதிக்கம்.

  ‘பல நாடுகளில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறைந்துவருகின்றன’
  ‘எங்கள் கல்லூரியின் விடுதியில் கட்டுப்பாடுகள் அதிகம்’

 • 3

  (சீராகவோ அளவுக்கு மீறிப் போய்விடாமலோ ஒன்றை) கட்டுக்குள் வைத்திருப்பது; முறைமை.

  ‘தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் வெற்றியடையவில்லை’
  ‘வாடகைக் கட்டுப்பாட்டு வாரியம்’
  ‘இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்’

 • 4

  (ஒன்றைச் செயல்படுத்த, நிர்வகிக்க, மேற்பார்வையிட ஒருவருக்கு இருக்கும்) அதிகாரம்; பொறுப்பு.

  ‘ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’
  ‘தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்’
  ‘இந்தக் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிறது’