தமிழ் கட்டுப்பெட்டி யின் அர்த்தம்

கட்டுப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (புதிய மாறுதல்கள்பற்றி அறிந்துகொள்ளாமல்) பழைய வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வாழ்பவர்.

    ‘பெண்கள் கட்டுப்பெட்டிகளாக இருந்த காலம் மலையேறிவிட்டது’
    ‘இளைஞனான நீ இன்றைய வாழ்க்கையின் போக்குகளைப் புரிந்துகொள்ளாத கட்டுப்பெட்டியாக இருப்பது வியப்பாக இருக்கிறது’