தமிழ் கட்டுமீறு யின் அர்த்தம்

கட்டுமீறு

வினைச்சொல்-மீற, -மீறி

 • 1

  தடையை அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை மீறுதல்.

  ‘கட்டுமீறி உள்ளே நுழைய முயன்றவனைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்’
  ‘கட்டுமீறி ஓடிய காளையைப் பிடிக்க இளைஞர்கள் முயன்றனர்’

 • 2

  (ஒரு குறிப்பிட்ட நிலைமை) கட்டுப்படுத்த முடியாத அளவுக்குத் தீவிரத் தன்மையை அடைதல்.

  ‘நாட்டின் நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது’
  ‘உணர்ச்சிகள் கட்டுமீறிப் போகாமல் பார்த்துக்கொள்வது நல்லது’