தமிழ் கட்டை யின் அர்த்தம்

கட்டை

பெயர்ச்சொல்

 • 1

  (மரத் துண்டு தொடர்புடைய வழக்கு)

  1. 1.1 அளவாக வெட்டப்பட்ட மரத் துண்டு

   ‘சந்தனக் கட்டை’
   ‘பிணத்தைச் சுற்றிக் கட்டைகளை அடுக்கினார்கள்’
   ‘கட்டையால் தாக்கப்பட்டு மரணம்’

  2. 1.2 (துப்பாக்கியின் கைப்பிடியை ஒட்டிப் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும்) பட்டையான, நீண்ட மரத்துண்டு

   ‘தோட்டா தீர்ந்துவிட்டால் துப்பாக்கிக் கட்டையாலும் தாக்கலாம்’

  3. 1.3 (ஆர்மோனியத்தில் ஸ்வரத்தைக் குறிக்கும்) பட்டை வடிவத் துண்டு

  4. 1.4இலங்கைத் தமிழ் வழக்கு சற்றுப் பருமனான குச்சி

   ‘துவரங்கட்டை’
   ‘பூவரசங்கட்டை’

 • 2

  (உயரத்தைக் குறிப்பிடும் வழக்கு)

  1. 2.1 உயரக் குறைவு; நீளம் குறைந்தது; குட்டை

   ‘தலைமுடி கட்டையாக இருக்கிறது’
   ‘அவர் உயரத்தில் சிறிது கட்டைதான்’
   ‘பெருக்கிப்பெருக்கித் துடைப்பம் கட்டையாகப் போய்விட்டது’

 • 3

  (ஆள் தொடர்பான வழக்கு)

  1. 3.1பேச்சு வழக்கு (ஒருவரின்) உடல்/ஒரு நபர்

   ‘இப்போதுதான் கட்டையைக் கிடத்தினேன்; அதற்குள் பால்காரர் வந்துவிட்டார்’
   ‘அவன் எதற்கும் துணிந்த கட்டை’

தமிழ் கட்டை யின் அர்த்தம்

கட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மைல்.

  ‘இங்கிருந்து எத்தனை கட்டை தூரத்தில் உன் வீடு இருக்கிறது?’
  ‘கோவிலுக்கு இன்னும் நாலு கட்டை போக வேண்டும்’