தமிழ் கட்டையை நீட்டு யின் அர்த்தம்

கட்டையை நீட்டு

வினைச்சொல்நீட்ட, நீட்டி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (அலுப்புடன் குறிப்பிடும்போது) (படுத்து) ஓய்வெடுத்தல்.

  ‘பத்து நிமிடம் கட்டையை நீட்டலாம் என்றால் அதற்குள் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது’
  ‘இந்த வீட்டில் ஐந்து நிமிஷம் கட்டையை நீட்ட முடிகிறதா?’

 • 2

  பேச்சு வழக்கு (விரக்தியுடனோ மரியாதைக் குறைவான முறையிலோ குறிப்பிடும்போது) இறத்தல்.

  ‘நான் கட்டையை நீட்டிவிட்டால் இந்தக் குடும்பம் என்னவாகும் என்று யோசித்தீர்களா?’
  ‘இந்தக் கிழம் எப்போது கட்டையை நீட்டும் என்று எதிர்பார்த்தவர்கள்போல் எல்லோரும் நடந்துகொண்டார்கள்’