தமிழ் கட்டைவிரல் யின் அர்த்தம்

கட்டைவிரல்

பெயர்ச்சொல்

  • 1

    கையில் மற்ற நான்கு விரல்களைவிட உயரத்தில் குறைந்தும் சற்றுப் பருமனாகவும் தனித்தும் (பொருளைப் பிடிப்பதற்கு வசதியாகவும்) இருக்கும் விரல்/காலில் மற்ற விரல்களைவிடத் தடியாக உள்ள முதல் விரல்; பெருவிரல்.

    ‘கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் கட்டைவிரல் ரேகையைத்தான் பதிப்பார்கள்’
    ‘திருமணத்தில் அம்மி மிதிக்கும்போது மணமகன் மணமகளின் கட்டைவிரலைப் பிடித்துப் பாதத்தைத் தூக்கி வைக்க வேண்டும்’