தமிழ் கடன் யின் அர்த்தம்

கடன்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட காலத்திற்குள்) திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம்; கைமாற்று; (வட்டியுடனோ வட்டி இல்லாமலோ) திருப்பித் தர வேண்டிய பணம்.

  ‘நூறு ரூபாய் கடன் கொடுங்கள், ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன்’
  ‘பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது’
  உரு வழக்கு ‘இந்தச் சிந்தனை நான் புதுமைப்பித்தனிடமிருந்து கடன் வாங்கியது’

 • 2

  முதலில் பொருளை வாங்கிக்கொண்டு பின்னர் அதற்குப் பணம் தரும் முறை.

  ‘மளிகைக் கடைக்காரர் கடனுக்குச் சாமான் தர மறுத்துவிட்டார்’
  ‘‘இன்று ரொக்கம், நாளை கடன்’ என்ற அறிவிப்பு கடையில் தொங்கியது’

 • 3

  பிறர் பொருளைப் பிறகு திருப்பித் தருவதாகக் கூறிப் பெறுதல்; இரவல்.

  ‘பக்கத்து வீட்டில் காப்பிப்பொடி கடன் வாங்கித்தான் காப்பி போட்டேன்’

 • 4

  உயர் வழக்கு ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.

  ‘பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடன்’

 • 5

  ஈடுபாடு இல்லாமல் வெறும் கடமைக்காக மட்டும் ஒன்றைச் செய்யும் நிலை.

  ‘எந்த வேலையையும் கடனே என்று செய்யாதே, உற்சாகத்தோடு செய்’
  ‘உன்னைப் பெற்ற கடனுக்காக இதைச் செய்ய வேண்டியிருக்கிறது’