தமிழ் கடன்காரன் யின் அர்த்தம்

கடன்காரன்

பெயர்ச்சொல்

 • 1

  கடன் கொடுத்தவன்.

  ‘காலையில் கடன்காரன் வந்து கத்திவிட்டுப் போனான்’

 • 2

  கடன் வாங்கியவன்.

  ‘உன் பேச்சைக் கேட்டுச் செலவு செய்தால் நாளைக்கு நான் கடன்காரனாகத்தான் நிற்பேன்’

 • 3

  (பெரும்பாலும் எரிச்சலுடன்) திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.

  ‘‘இப்படிச் செய்துவிட்டாயே, கடன்காரா’ என்று அம்மா திட்டத் தொடங்கிவிட்டாள்’