தமிழ் கடமை யின் அர்த்தம்
கடமை
பெயர்ச்சொல்
- 1
(ஒருவர் தான்) இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி/(ஓர் அரசு, அமைப்பு முதலியன) அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு.
‘கற்பிப்பது ஆசிரியரின் கடமை, கற்றுக்கொள்வது மாணவனின் கடமை’‘குடிமக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அரசின் கடமை ஆகும்’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு வேலை; பணி.
‘நேற்றுதான் அவர் கடமைக்குத் திரும்பினார்’‘கடமையின் நிமித்தம் அவர் வெளியூர் சென்றிருக்கிறார்’